செய்திகள்

'பாரதி கண்ணம்மா' சீசன் 2-ல் ரோஜா தொடரின் நாயகன்!

4th Feb 2023 08:34 AM

ADVERTISEMENT

 

'பாரதி கண்ணம்மா' தொடரின் இரண்டாம் சீசனில் ரோஜா தொடரில் நாயகனாக நடித்த சிபு சூர்யன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். முதல் சீசனில் நாயகியாக நடித்த வினுஷா தேவியே இந்த தொடரிலும் நாயகியாக நடிக்கவுள்ளார். 

விஜய் தொலைக்காட்சி தொடர்களில் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற தொடர்கள் இரண்டாம் சீசனாக வருவதுண்டு. சரவணன் மீனாட்சி, கனா கானும் காலங்கள், ராஜா ராணி போன்றவை அந்த ரகத்தில் பல சீசன்கள் கண்டவை. 

அந்த வரிசையில் தற்போது 'பாரதி கண்ணம்மா' தொடரும் இணைந்துள்ளது. 'பாரதி கண்ணம்மா' தொடரின் முதல் சீசன் கடந்த வாரம் வெற்றிகரமாக முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 'பாரதி கண்ணம்மா' இரண்டாம் சீசனுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

அதில் நாயகனாக சிபு சூர்யன் நடிக்கவுள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்புக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான ரோஜா தொடரில் நாயகனாக நடித்தவர். எனினும் அவருக்கு இளம்பெண்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.

நாயகியாக முதல் பாகத்தில் நடித்த வினுஷா தேவியே தொடர்கிறார். இவர் ரோஷினி ஹரிபிரியனுக்கு பதிலாக ''பாரதி கண்ணம்மா''வில் அறிமுகமானார். 

இந்த தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. கடந்த தொடரில் கண்ணம்மாவுக்கு அம்மா இல்லை. ஆனால் இந்த சீசனில் கண்ணம்மாவின் அம்மா கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT