செய்திகள்

‘ஏகே 62’ படத்திலிருந்து விலகியதை சூசகமாக உணர்த்திய விக்னேஷ் சிவன்! 

4th Feb 2023 10:29 AM

ADVERTISEMENT

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்  கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் துணிவு. ஜன.11ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

அதனைத் தொடர்ந்து, லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் ஸ்கிரிப்ட் பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து அஜித் விலகுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இதையும் படிக்க: 'பாரதி கண்ணம்மா' சீசன் 2-ல் ரோஜா தொடரின் நாயகன்!

‘கழகத்தலைவன்’ படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் ஏகே62 இருக்குமெனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

ADVERTISEMENT

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் ஏகே 62 படத்தினை நீக்கியுள்ளார். மேலும் கவர் பிக்சரையும் மாற்றியுள்ளார். அந்தப் புகைப்படத்தில் ‘நெவர் கிவ் அப்’என்ற வாசகம் பதிந்துள்ளது. இதனால விக்னேஷ் சிவன் ஏகே62 படத்திலிருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.

ஏகே63 படத்தில் இணைவாரா அல்லது இனிமேல அஜித்துடன் சேரமாட்டாரா என்பது பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT