செய்திகள்

விஜய் 67 - படத்தின் பெயர் இதுவா?

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 67 திரைப்படத்தின் பெயர் குறித்து கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் விஜய் 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

மேலும், படக்குழுவினர் காஷ்மீர் சென்ற விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனி விமானத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் பெயரை படக்குழு அறிவிக்கவுள்ளது. அதேநேரம், நேற்று பெயர் அறிவிப்பிற்காக ரத்தத்தால் ஆன விஜய் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரின் நிறுவனம் வெளியிட்டது.

அந்தப் போஸ்டருடன்    விஜய்யின் 67வது படத்தைக் குறிப்பிடும் பொருட்டு 67% லோடிங் என்பதுடன் மீதம் 3 கட்டங்களை நிரப்பாமல் விட்டிருந்தது. அதனால், படத்தின் தலைப்பு 3 எழுத்தில் இருக்கலாம் என்றும் அது எல்.சி.யூவை குறிப்பிடுவதாகவும் ரசிகர்கள் டிவிட்டரில் கருத்துக்களை பகிர்வதுடன் ‘குருதி’, ‘குருதிபுனல்’ என ரத்தம் சார்ந்து தலைப்பு இருக்கலாம் என இணையத்தில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், இந்திய அளவில் ’விஜய் 67’ டிரண்டிங்கில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT