செய்திகள்

நெல்லை தங்கராஜ் உடலுக்கு நாளை (பிப். 4) இறுதி மரியாதை!

DIN

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புறக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நாளை (பிப். 4) நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில், சமூக அநீதியை மையமாக எடுக்கப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லையை சேர்ந்த தங்கராஜ் கதாநாயகனின் தந்தையாக நடித்திருந்தார்.  அவர் கிராமத்து கூத்து கட்டும் வேடத்தில் நடித்திருந்தார். அவரின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். 

இந்நிலையில், உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு தங்கராஜ் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இவருக்கு பேச்சிக்கனி என்ற மனைவியும் அரசிளங்குமரி என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் உள்ள இல்லத்தில் தங்கராஜ் உடல் வைக்கப்பட்டு உறவினர்கள் பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.

தங்கராஜ் குடும்பத்துக்கு உதவி

முதலில் போதிய வசதி இல்லாத சிறிய வீட்டில் வசித்து வந்த பரியேறும் பெருமாள் தங்கராஜிக்கு நெல்லை ஆட்சியர் விஷ்ணு உதவியுடன் பல்வேறு தன்னார்வலர்கள் இணைந்து புதிய இல்லம் சமீபத்தில் கட்டி கொடுத்தனர். 

மேலும், தங்கராஜ் மகளுக்கு ஆட்சியர் விஷ்ணு சிறப்பு உதவியாக அரசு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணி நியமனம் செய்து கொடுத்தார் 

இதுபோன்று பல்வேறு உதவிகள் கிடைத்த நிலையில் தங்கராஜ் உடல்நிலை குறைவால் உயிரிழந்திருந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT