செய்திகள்

துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ வெளியீடு குறித்து அறிவிப்பு

3rd Feb 2023 03:17 PM

ADVERTISEMENT

 

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். 5 மொழிகளில் வெளியாகி பெறும் ஆதரவினைப் பெற்றது. 

இதையும் படிக்க: விஜய் 67 - காஷ்மீர் சென்ற படக்குழு: விடியோ வெளியீடு

ADVERTISEMENT

தற்போது, சீதா ராமம் வெற்றியைத் தொடர்ந்து 'கிங் ஆஃப் கோதா' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார்.  

இந்தப் படமும் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என 5 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கிங் ஆஃப் கோதா திரைப்படம் 2023, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT