செய்திகள்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அறிவிப்பு

2nd Feb 2023 07:12 PM

ADVERTISEMENT

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

கடந்த ஜனவரி 23ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

அதில் 2023-26ஆம் ஆண்டிற்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை நடத்தலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ‘ரன் பேபி ரன்’: திரை விமர்சனம்

23.02.2023 காலை 11 மணி முதல் 26.02.2023 மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் வழங்கப்படும் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை 2.3.2023ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைத் திரும்பப் பெற 05.03.2023 கடைசி தினம். அன்றைய தினம் மாலை 6 மணியளவில் இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் 26.03.2023 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு நடைபெறும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : cinema news
ADVERTISEMENT
ADVERTISEMENT