செய்திகள்

தளபதி 67: 14 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் விஜய்-த்ரிஷா

1st Feb 2023 03:07 PM

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார் நடிகை த்ரிஷா.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தளபதி 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான அறிவிப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் நேற்றிலிருந்து வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கெனவே இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிகர்களாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று வெளியான அறிவிப்பில் நடிகை த்ரிஷாவும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் த்ரிஷா கூட்டணி ஏற்கெனவே பல்வேறு வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளது. கில்லி, குருவி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

14 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் விஜய்-த்ரிஷா கூட்டணியில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT