செய்திகள்

விஜய் 67: பூஜை விடியோ வெளியானது

1st Feb 2023 07:03 PM

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை விடியோ வெளியானது.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் விஜய் 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான அறிவிப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் நேற்றிலிருந்து வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

ADVERTISEMENT

 

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு தனிவிமானம் மூலம் நேற்று ஸ்ரீநகர் சென்றது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜை விடியோ வெளியாகியுள்ளது. இதில் படத்தின் நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரவிக்குமார் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT