செய்திகள்

பிரம்மாண்ட வெற்றி... விரைவில் ‘பதான் 2’?

DIN

ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர். 

2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன் பிறகு ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. 

பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. 

இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக, பதான் படத்தை புறக்கணிக்குமாறு சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் வெளியாகியது. ஆனாலும் எதிர்பார்க்காத வகையில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

 உலகம் முழுவதும் முதல் 6 நாள்கள்(திங்கள்கிழமை வரை) முடிவில் பதான் திரைப்படம் ரூ. 591 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் ரூ. 367 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 224 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பதான் திரைப்படத்திற்கு வரும் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், இரண்டாம் வார முடிவிலேயே ரூ.1,000 கோடி வசூலை கடந்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் ஷாருக்கான், ‘ பதான் படத்தை பார்த்த ரசிகர்களுக்கும் வெற்றிபெறச் செய்தவர்களுக்கும் நன்றியுடன் இருக்கிறோம். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம். அதைத் தாண்டி யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. என் முந்தைய படங்களின் தோல்வியால் வேறு தொழிலுக்கு சென்றுவிடலாமா என நினைத்துக்கொண்டிருந்தேன். உணவக தொழில் செய்யலாம் என சமையல் கூட கற்றுக்கொண்டேன். ஆனால், பதானின் வெற்றி என்னை காப்பாற்றியிருக்கிறது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் ‘பதான் -  2’ பாகத்தை எடுக்க விரும்பினால் அதில் நடிப்பதை பெருமையாகக் கருதுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

SCROLL FOR NEXT