செய்திகள்

’மைக்கேல்' மேக்கிங் விடியோ வெளியீடு

1st Feb 2023 04:18 PM

ADVERTISEMENT

 

மைக்கேல் திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மாநகரம்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற சந்தீப் கிஷன் நடித்துள்ள திரைப்படம் ‘மைக்கேல்’.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். 

ADVERTISEMENT

ஏற்கனவே இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

’மைக்கேல்’ பிப்ரவரி 3ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT