செய்திகள்

நடிகையாக களமிறங்கும் 'பிக் பாஸ்' பிரபலம்!

1st Feb 2023 04:30 PM

ADVERTISEMENT

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில்  தொடர்ந்து 6-வது முறையாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

சுமார் 106 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில், அஷீம் முதலிடம், விக்ரமன் இரண்டாமிடம், ஷிவின் மூன்றாமிடம் பெற்றனர். இறுதிப்போட்டி வரை சென்ற திருநங்கை போட்டியாளர் என்ற பெருமையை ஷிவின் பெற்றார். 

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 படத்தில்  ஷிவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி

முன்னதாக, விஜய்யின் 67 வது  படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT