செய்திகள்

அசோக் செல்வன் - சாந்தனு கூட்டணி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

1st Feb 2023 03:13 PM

ADVERTISEMENT

 

அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்கத்தில்  உருவான புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்படத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் ,
கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: பிரபல எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!

இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது.

அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்திருக்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT