செய்திகள்

ஹிந்தியில் ரிமேக்காகும் பரியேறும் பெருமாள்?

25th Apr 2023 02:55 PM

ADVERTISEMENT

இயக்குநர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நாயகனாக கதிர், நாயகியாக ஆனந்தி நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை அமைந்திருக்கும்.

விமர்சனரீதியாக பலரின் பாராட்டுகளை குவித்த இப்படத்தையை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

கரண் ஜோஹர் இயக்கத்தில் சித்தாந்த் சதுர்வேதியும், நடிகை திருப்தி திம்ரியும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT