செய்திகள்

எந்த கெட்டப் போட்டாலும் சூப்பர்: ரசிகையின் பாராட்டு மழையில் எஸ்.ஜே.சூர்யா

25th Apr 2023 06:41 PM

ADVERTISEMENT

 

தனித்துவமான இயக்குநராக இருந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். மாநாடு படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வதந்தி இணையத் தொடர் நல்ல வரவேற்பினை பெற்றது. வாரிசு படத்தில் சிறிய கதாபாத்திரம் செய்திருந்தார். 

தற்போது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 படத்திலும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இதையும் படிக்க: வைரலாகும் ஆர்எக்ஸ்100 பட இயக்குநரின் புதிய போஸ்டர் 

ADVERTISEMENT

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் புதிய தோற்றங்களில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

நேற்று வெளியான புதிய போஸ்டரை ரசிகை ஒருவர் பகிர்ந்து, “எந்த கெட்டப் போட்டாலும் பொருத்தமாக உள்ளது. டீசருக்காக காத்திருக்கிறேன். ஜேக்கி பாண்டியன் கலக்குவார் என எதிபார்க்கிறேன். மிகுந்த அன்பு” என பதிவிட்டுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா இதை லைக், ரீட்விட் செய்துள்ளார்.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT