செய்திகள்

7ஜி ரெயின்போ காலனி-2 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!

25th Apr 2023 03:32 PM

ADVERTISEMENT

7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் 2-வது பாகத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திரைக்கதை எழுதும் பணியில் செல்வராகவன் ஈடுபட்டுள்ளதாகவும், ஜூன் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு அடுத்தாண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் அல்லது புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT