செய்திகள்

டிஆர்பியில் முதல் இடம் பிடித்த ‘கயல்’ சீரியல்

15th Apr 2023 04:40 PM

ADVERTISEMENT

‘கயல்’ சீரியல் டிஆர்பி தர வரிசையில் முதல் இடத்தைப்  பிடித்துள்ளது.

கடந்த வாரங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி பட்டியலில் இருந்து வெளியேறியதன் மூலம் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. டிஆர்பியில் முதல் 5 இடங்களை பெற்ற நிகழ்ச்சிகளை காண்போம்.

சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ்  நடித்துவரும் கயல் சீரியல் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே கதை நகர்கிறது. தன் தங்கையின் திருமணத்தை ஏற்பாடு செய்வது, பணியிட தொல்லைகள் என பல தடைகளை அவள் வாழ்க்கையில் சந்திக்கிறாள். கயல் எப்படி எல்லா தடைகளையும் தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே கதை.

இரண்டாவது இடத்தில் இனியா சீரியல் உள்ளது.  அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான பாரதி கண்ணம்மா 2 கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து டிஆர்பி ரேட்டிங்கில் 3வது இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் வினுஷா தேவி, சிபு சூர்யன், ஃபரினா ஆசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

நான்காவது இடத்தில், கேஎஸ் சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுப்புலேட்டி மற்றும் ரஞ்சித் நடித்துவரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

அமானுஷ்ய த்ரில்லர் சீரியலான மாரி அதிக தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களைப் பெற்று, ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் ஆஷிகா படுகோன், ஆதர்ஷ், சோனா ஹைடன், சிவ சுப்ரமணியன், அபிதா, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT