செய்திகள்

'காசேதான் கடவுளடா' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

15th Apr 2023 05:20 PM

ADVERTISEMENT

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள காசேதான் கடவுளடா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

1972 ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா என்ற ரீமேக் படத்தின் வெளியீட்டுத் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. கடைசியாக மார்ச் 24 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் வெளியாகாததால் வரும் மே 12 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் சிவாங்கி மற்றும் குக் வித் கோமாளி புகழ் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 

எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தனது சொந்த பேனரான மசாலா பிக்ஸ் மூலம் கண்ணன் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்திற்கு என்.கண்ணன் இசையமைக்க, பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT