செய்திகள்

த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வனை விட மகிழ்ச்சியான நாள் இது.. என்ன?

DIN

நடிகை த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் வெளியான மகிழ்ச்சியைப்போல இன்னொரு நிகழ்வும் இதே நாளில் நடந்துள்ளது.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.

படத்தின் விமர்சனங்களும் நேர்மறையாக இருப்பதால் மிகப்பெரிய வணிக வெற்றியை இப்படம் அடையும் என விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், குந்தவையாக நடித்த நடிகை த்ரிஷாவுக்கும் நல்ல பெயரை இப்படம் பெற்று தந்துள்ளது. குறிப்பாக, ’ராட்சஸ மாமனே’ பாடலில் ரவிவர்மன் ஒளிப்பதிவில் வசீகரமான த்ரிஷா ரசிகர்களை ’விசில்’ அடிக்க வைக்கிறார். 

அவருடைய சினிமா வாழ்வில் இது முக்கியமான திரைப்படம். அதேநேரம் பொன்னியின் செல்வன் வெளியான இதே நாளில் இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வும் அவர் வாழ்வில் நடந்துள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு செப்.30 ஆம் தேதி தன் 16-வது வயதில் த்ரிஷா சென்னை அழகிப்பட்டத்தைப்(மிஸ் சென்னை) பெற்றுள்ளார். அப்போது, கல்லூரி மாணவியான அவர் சரியாக 23 ஆண்டுகள் கழித்தும் அதே பொலிவுடன்  இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மிஸ் சென்னை விருதுபெற்றபோது....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT