செய்திகள்

தேசிய திரைப்பட விருது விழாவில் தமிழ் கலைஞர்கள்

30th Sep 2022 08:27 PM

ADVERTISEMENT

68ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் நடிகர்கள் சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா என பலர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். 

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷூக்கும், சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டன. 

இதையும் படிக்க | சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு

 

இவை தவிர சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலியும், சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படமும், சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர். 

ADVERTISEMENT

இந்நிலையில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா தில்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ் கலைஞர்கள் சூர்யா, ஜி.வி.பிரகாஷ், அபர்ணா முரளி, ஜோதிகா, மடோனா அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT