செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு

30th Sep 2022 07:22 PM

ADVERTISEMENT

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

டாக்டர், டான் என அடுத்து இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனால் அவர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க, உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

ADVERTISEMENT

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து,  இரண்டாவது பாடலான ஜெஸ்ஸிகாவும் வெளியானது. 

இந்நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற அக்.9 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவுபெற்றதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT