செய்திகள்

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் சூர்யா!

30th Sep 2022 06:24 PM

ADVERTISEMENT

 

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா பெற்றார்.

2020 ஆம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட 68-வது தேசிய விருதுகள் தற்போது தில்லியில் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டிருந்த சூர்யா இன்று தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார். 'சூரரைப் போற்று' படத்தில் நடித்தற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

மேலும், விருதுப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த தமிழ் படமாக 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' சார்பாக அப்படத்தின் இயக்குநர் வசந்த், சிறந்த இசையமைப்பாளராக ’அல வைக்குந்தபுரமுலோ’ படத்துக்காக தமன் மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான விருது 'சூரரைப் போற்று' படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்? திரை விமர்சனம்

சிறந்த நடிகைக்காக விருது அபர்ணா பாலமுரளிக்கு வழங்கப்பட்டது. 

மனைவி ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா

சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக ஸ்ரீகர் பிரசாத்துக்கும் சிறந்த துணை நடிகையாக அதே படத்தில் நடித்த லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்கும் சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. 

சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்காரா சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT