செய்திகள்

மீண்டும் ஷாருக்கானை இயக்குவீர்களா?: மணிரத்னம் விளக்கம்

29th Sep 2022 12:31 PM

ADVERTISEMENT

 

நடிகர் ஷாருக்கானை மீண்டும் இயக்குவீர்களா என்கிற கேள்விக்கு இயக்குநர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

நாளை (செப்.30) ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: சிரஞ்சீவி - சல்மான் கான் நடித்துள்ள ’காட்ஃபாதர்’ டிரைலர் வெளியீடு

இந்நிலையில், இப்படத்தின் இறுதி புரோமோஷன் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் மணிரத்னம் கலந்துகொண்டார்.

அப்போது,  மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘தில் சே’(உயிரே) திரைப்படத்தைக் குறிப்பிட்டு மீண்டும் ஷாருக்கானை வைத்து படம் எடுப்பீர்களா? என மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

உயிரே படப்பிடிப்பில்...

அதற்கு அவர் ‘என்னைப் பொருத்தவரை நல்ல கதையை வைத்தே நடிகர்களை முடிவு செய்வேன். நடிகர்களை மனதில் வைத்து கதை எழுத மாட்டேன். ஷாருக்கானுக்கு ஏற்ற கதை அமைந்தால் அவருடன் பணியாற்றுவேன்’ எனக் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT