செய்திகள்

‘ரொம்ப பயமா இருக்கு...’ பொன்னியின் செல்வன் குறித்து நடிகர் விக்ரம்

29th Sep 2022 04:39 PM

ADVERTISEMENT

 

பொன்னியின் செல்வனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு பயத்தை ஏற்படுத்துவதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

நாளை (செப்.30) ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: மருத்துவரைச் சந்தித்த ராஷ்மிகா: என்ன பிரச்னை?

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விக்ரம், பார்த்திபன், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு நடிகைகள் திரிஷா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி மற்றும் சோபிதா ஆகியோர் கலந்துகொண்டனர். 

அப்போது, பேசிய நடிகர் விக்ரம் ‘பொன்னியின் செல்வனுக்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு வியப்பளிக்கிறது. படத்தை விளம்பரப்படுத்த சென்ற இடங்களிலெல்லாம் நல்ல வரவேற்புக் கிடைத்தது. திருவிளையாடலுக்குப் பிறகு எல்லாத் தலைமுறையினரும் காத்திருக்கும் படமாக பொன்னியின் செல்வன் இருப்பதை நினைக்கும்போது பெருமையாகவும் ரொம்ப பயமாகவும் உள்ளது. நாளை படத்தைக் காண வயதானவர்களும் வருவார்கள் என்பதால் திரையரங்க நிர்வாகத்தினர் அவர்களுக்கு உதவ வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT