செய்திகள்

இணையத்தில் கசிந்த ‘ஜெயிலர்’ ரஜினி புகைப்படம்: படக்குழுவினர் அதிர்ச்சி

29th Sep 2022 01:12 PM

ADVERTISEMENT

 

நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும்  ஜெயிலர் திரைப்படத்தின்  புகைப்படம் இணையத்தில் வெளியானதால்  படக்குழுவினர்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல நடிகர்களின் படப்பிடிப்பின் போது, படக்குழுவினருக்கே தெரியாமல் திரைப்படக் காட்சிகளை திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | மீண்டும் ஷாருக்கானை இயக்குவீர்களா?: மணிரத்னம் விளக்கம்

இந்நிலையில், நடிகர் ரஜினி படப்பிடிப்பு தளத்திற்கு நடந்து வருவதைப்போல புதிய படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களைப் பார்த்து வணக்கம் வைப்பதைப் போன்ற இப்படத்தை பலர் பகிர்ந்து வருவதால் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் கசிந்த ’ஜெயிலர்’ புகைப்படம்

முன்னதாக, கோட் சூட் அணிந்து நாற்காலியில் அமர்ந்து நடிக்கும் விடியோ இணையத்தில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, வாரிசு குழுவினர் மிகவும் பாதுகாப்புடனும், கட்டுப்பாடுடனும் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT