செய்திகள்

நடிகர் தனுஷூக்கு 'பீர்' அபிஷேகம் செய்த ரசிகர்கள்...

29th Sep 2022 05:55 PM

ADVERTISEMENT

 

’நானே வருவேன்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் தனுஷ் பதாகைக்கு பீர் அபிஷேகம் செய்து பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாக அமைந்தன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'நானே வருவேன்' இன்று வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில்  படம் வெளியான அனைத்து திரையரங்களிலும் ரசிகர்கள் காலை முதல் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: நானே வருவேன் - பார்க்கலாமா? - திரை விமர்சனம்

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த தனுஷ் பேனருக்கு அவருடைய ரசிகர்கள் பீர் அபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனால், இணையத்தில் இச்சம்பவம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT