செய்திகள்

பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சிகளில் பேரழகுடன் ஜொலித்த த்ரிஷா (படங்கள்)

28th Sep 2022 01:04 PM

ADVERTISEMENT 

ஐஸ்வர்யா ராய் நடித்த ஒரு படத்தில் இன்னொரு நடிகை பேர் வாங்குவது சிரமம்.

படத்தில் எப்படி என்று என்று தெரியவில்லை. ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பு உலக அழகியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டார் த்ரிஷா.

பொன்னியின் செல்வன் படக்குழுவினர் திருவனந்தபுரம், ஹைதராபாத், பெங்களூர், மும்பை, தில்லி என இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குச் சென்று படத்தை விளம்பரம் செய்வதற்காக செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். மணி ரத்னம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்ட இந்த நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மெட்ராஸ் டாக்கீஸ், லைகா ஆகிய நிறுவனங்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தன. 

ADVERTISEMENT

இந்தப் புகைப்படங்களில் வெளிப்பட்ட த்ரிஷாவின் அழகு, அவர் கச்சிதமாக உடையணிந்து தன்னை முன்னிறுத்திய விதம் ஆகியவற்றைப் பாராட்டி ஏராளமான ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகி, மூத்த நடிகையாக இருந்தாலும் இன்னமும் ரசிகர்களைக் கவர்வதில் த்ரிஷாவிடம் உள்ள ஆர்வம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படமும் விளம்பர நிகழ்ச்சிகளில் வெளிப்பட அழகும் த்ரிஷாவுக்குத் திரைத்துறையில் மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

மும்பையில்

 

 

 

 

சென்னையில்

 

 

 

பெங்களூரில்

 

 

 

ஹைதராபாத்தில்

 

 

 

தில்லியில்

 

திருவனந்தபுரத்தில்

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT