செய்திகள்

பிக் பாஸ்: 6-வது முறையாகத் தொகுத்து வழங்கும் கமல்!

28th Sep 2022 04:04 PM

ADVERTISEMENT

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. 

இந்நிலையில் பிக் பாஸ் பருவம் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 முதல் தொடங்கவுள்ளதாக விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. முதல் நாள் நிகழ்ச்சி மாலை ஆறு மணிக்குத் தொடங்குகிறது. ஆறாவது முறையாக நடிகர் கமல் ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

ADVERTISEMENT

அரசியல், நடிப்பு, தயாரிப்பு எனப் பல வேலைகளில் மும்முரமாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலிருந்து கமல் பின்வாங்குவதில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களைச் சென்றடைவது அரசியலுக்கும் திரைப்படத்துறைக்கும் உதவும் என அவர் நம்புகிறார். அதனால் தான் விக்ரம் படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார். 

இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி ராஜலட்சுமி செந்தில், நடிகை ஷில்பா மஞ்சுநாத், டிவி நடிகை ரோஷிணி, தர்ஷா குப்தா, அஸ்வின் குமார், ரவிந்தர் - மகாலட்சுமி ஜோடி எனப் பல பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் ராஜு வென்றார். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT