செய்திகள்

சிம்புவின் 'மல்லிப் பூ' விடியோ பாடல் வெளியானது! 

27th Sep 2022 08:29 PM

ADVERTISEMENT

 

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லிப் பூ பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் வசூலில் குறை வைக்கவில்லை. படம் வெளியான முதல் நான்கு நாள்களிலேயே ரூ.50 கோடிகளுக்கு மேலாக வசூலித்ததாக தகவல் வெளியானது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. 

ADVERTISEMENT

இந்தப் படத்தில் மல்லிப் பூ பாடல் மிகவும் புகழ்பெற்றது. தாமரை எழுதிய இந்தப் பாடலை பாடியவர் மதுஸ்ரீ. நடன இயக்குநர் பிரிந்தா இந்த பாடலுக்கு எளிமையான நடனங்களை வைத்து மக்களை ரசிக்கும்படி அமைத்திருப்பார். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த பாடலின் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இரவு 7.02க்கு வெளியாக வேண்டிய பாடல் சற்று தாமதமாகவே வெளியானது. 
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT