செய்திகள்

பொன்னியின் செல்வன்: த்ரிஷாவின் ஆடை வடிவமைப்பாளர் யார் தெரியுமா? 

27th Sep 2022 03:36 PM

ADVERTISEMENT


பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக த்ரிஷா அணிந்திருந்த உடைகள் பலராலும் பாராட்டட்பட்டது. 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் படம் மற்றும் படத்தின் புரமோஷன் உட்பட எல்லாவற்றுக்கும் ஒரே ஆடை வடிவமைப்பாளர்தான். அவர் ஏகா லஹானி. ஹிந்தி ராவணன் படத்தில் ஆடை உதவியாளராக சேர்ந்தவர் 2013 முதல் மணிரத்னம் படங்களுக்கு இவர்தான் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். 

பொன்னியின் செல்வன் காஷ்ட்யூம்கள் அணிந்து இன்ஸ்டாகிரம் ரீல்ஸ் செய்பவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக பொன்னியின் செல்வன் படக்குழுவினர் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதில் நடிகை த்ரிஷாவின் உடை அலங்காரம் எல்லோரையும் கவனம் ஈர்த்தது. மேலும் நடிகர் விக்ரம், கார்த்தி அவர்களின் உடைகளும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT