செய்திகள்

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு, வெளியீடு பற்றி மணி ரத்னம்

26th Sep 2022 04:07 PM

ADVERTISEMENT

 

பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் அடுத்த ஆறு அல்லது ஒன்பது மாதங்களில் வெளியாகும் எனப் பிரபல இயக்குநர் மணி ரத்னம் அறிவித்துள்ளார். 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் பற்றி இயக்குநர் மணி ரத்னம் கூறியதாவது:

பொன்னியின் செல்வன் நாவலின் முழுக்கதையையும் படமாக்கி விட்டோம். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான பிறகு அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் 2-ம் பாகம் வெளியாகும் என்றார். 

Tags : Tamil News
ADVERTISEMENT
ADVERTISEMENT