செய்திகள்

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்': வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! 

26th Sep 2022 08:02 PM

ADVERTISEMENT

 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 2023இல் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 'எவில் இஸ் நாட் பார்ன். இட் இஸ் கிரியேட்டட்’ என்ற டேக் லைனுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதையும் படிக்க: டி20யில் அதிக வெற்றிகள்: விராட் கோலியை முந்திய ரோஹித் சர்மா!

ADVERTISEMENT

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 

எங்களது நிறுவனத்தின் வெற்றி படைப்புகளான பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா, டைரி வெற்றிப் பட வரிசையில் அடுத்து வருவது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ருத்ரன்' திரைப்படம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

இதையும் படிக்க: அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய கத்ரீனா கைஃப்!

'காஞ்சனா' திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படம் 'ருத்ரன்' என்பதால், ராகவா லாரன்ஸ் அவர்களின் ரசிகர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை முழு திருப்திபடுத்தும் விதமாக படத்தின் நிறைவு பணிகள் நடைபெற்று வருகிறது. 'ருத்ரன்' திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியிட, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைய சில மாதங்கள் தேவைப்படுவதால், ராகவா லாரன்ஸ் அவர்களின் நடிப்பில் மாபெரும் வெற்றிகண்ட காஞ்சனா திரைப்படம் வெளியான ஏப்ரல் மாதத்தில் 14.04.2023 தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 'ருத்ரன்' திரைப்படம் வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் அருளுடனும், ரசிகர்கள், மக்கள், ஊடகங்கள் ஆதரவுடனும் 'ருத்ரன்' ஏப்ரல் மாதத்தில் வெற்றி வாகை சூட வாழ்த்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT