செய்திகள்

நானே வருவேன்: 4 மணி காட்சி ரத்து

24th Sep 2022 09:10 PM

ADVERTISEMENT

நடிகர் தனுஷ் நடிப்பில் செப்.29ல் வெளியாகும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் காலை 4 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மயக்கம் என்ன படத்துக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தில் இந்துஜா, எல்லி ஏவிஆர்ராம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்வ வரவேற்பை பெற்றுள்ளது. படம் வருகிற செப்.29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. 

இதையும் படிக்க- அக்.1 முதல் 5ஜி அலைக்கற்றை சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்

ADVERTISEMENT

இந்த நிலையில் 'நானே வருவேன்' திரைப்படத்தின் காலை 4 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT