செய்திகள்

நானே வருவேன் படத்தின் ‘ரெண்டு ராஜா’ பாடல் வெளியானது!

24th Sep 2022 12:17 PM

ADVERTISEMENT

தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் நானே வருவேன் படத்தின் ரெண்டு ராஜா லிரிக்கல் பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

'என்ஜிகே' படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும்  'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். 

11 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், 'நானே வருவேன்’ திரைப்படம் வருகிற செப்.29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்தது. 

ADVERTISEMENT

தற்போது படத்தின் ‘ரெண்டு ராஜா’ லிரிக்கல் பாடல் விடியோ வெளியாகியுள்ளது. தனுஷ் எழுதியுள்ள இப்பாடலை தனுஷ், யுவன் இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT