செய்திகள்

‘நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் குருசாமி’- ஜெயம் ரவி குறிப்பிடுவது யாரை? 

24th Sep 2022 12:54 PM

ADVERTISEMENT

 

நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராம் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி.

இந்தப்படம் செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் படப்புரமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அதையொட்டி படம் வெற்றி பெற நடிகர் ஜெயம் ரவி பம்பையிலுள்ள சபரிமலைக்கு நடிகர் ஜெயராமுடன் சென்றுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜெயம்ரவி கூறியதாவது: 

பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில் !! 

ADVERTISEMENT
ADVERTISEMENT