செய்திகள்

துணிவு படப்பிடிப்புக்காக தாய்லாந்து பறந்த நடிகர் அஜித்

24th Sep 2022 04:43 PM

ADVERTISEMENT

துணிவு திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித்குமார் தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். 

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோரின் கூட்டணி இணைந்துள்ள படம் துணிவு. 

இதையும் படிக்க | நயன்தாரா காதல் கதை: டீசரை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்!

இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித்குமார் பங்குபெறும் காட்சிகளைப் படமாக்க படக்குழு தாய்லாந்தில் முகாமிட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித்குமார் சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டி பாங்காக் புறப்பட்டு சென்றார். 

இதையும் படிக்க | நெட்பிளிக்ஸ் தொடர்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: ஏ.ஆர். ரஹ்மான் சொல்லும் காரணம்!

சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT