செய்திகள்

இணையத்தில் கசிந்த ரஜினியின் ‘ஜெயிலர்’ காட்சி: படக்குழுவினர் அதிர்ச்சி

22nd Sep 2022 12:31 PM

ADVERTISEMENT

 

நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் காட்சி இணையத்தில் வெளியான சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல நடிகர்களின் படப்பிடிப்பின் போது, படக்குழுவினருக்கே தெரியாமல் திரைப்படக் காட்சிகளை திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில், ரஜினிகாந்த் நடித்த காட்சியை புகைப்படம் எடுத்த மர்மநபர் இணையத்தில் கசியவிட்டார்.

ADVERTISEMENT

இந்நிலையில், நடிகர் ரஜினி கோட் சூட் அணிந்து நாற்காலியில் அமர்ந்து நடிக்கும் விடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த காட்சியை இணையத்தில் பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிக்க | பேரனுடன் ரஜினிகாந்த் - சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த புகைப்படத்தால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

மேலும், இணையத்தில் இருந்து அந்த காட்சியை படக்குழுவினர் அழித்து வருகின்றது. அந்த மர்ம நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, வாரிசு குழுவினர் மிகவும் பாதுகாப்புடனும், கட்டுப்பாடுடனும் படப்பிடிப்பை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT