செய்திகள்

பிரபல ஹிந்தி நகைச்சுவை நடிகர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்

21st Sep 2022 11:54 AM

ADVERTISEMENT

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஹிந்தி திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான ராஜு ஸ்ரீவஸ்தவா கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். 

இதனையடுத்து அவர் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 58. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | நடிகர் சூரியின் உணவகத்தில் திடீர் சோதனை: சிக்கியது என்ன?

ராஜு ஸ்ரீவஸ்தவா மறைந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

இவரது மறைவு கலையுலகுக்கு மிகப்பெரிய இழப்பு என உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT