செய்திகள்

பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பயணம்

20th Sep 2022 12:43 PM

ADVERTISEMENT

 

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காகப் படக்குழுவினர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: தனுஷின் 'கேப்டன் மில்லர்' -  பிரியங்கா மோகனுக்கு பிறகு இணைந்த மற்றொரு கதாநாயகி

படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது. 

மேலும், இப்படத்தின் பாடல்கள் அனைத்து லிரிக்கல் விடியோ வெளியான நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காகப் படக்குழு கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சென்றுள்ளனர். 

அங்கிருந்து செப்.22 ஆம் தேதி பெங்களூரு செல்ல உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT