செய்திகள்

95வது ஆஸ்கர்: இந்தியாவிலிருந்து குஜராத்தி படம் தேர்வு!  

20th Sep 2022 07:50 PM

ADVERTISEMENT

 

குஜராத்தி இயக்குநர் பான் நிலன் இயக்கத்தில் உருவான ‘ஷெல்லோ ஷோ’ திரைப்படம் இந்தியாவின் சார்பாக 2023 ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் சார்பாக சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக 95வது ஆஸ்கர் விருதுக்கு குஜராத்தி திரைப்படமான ‘ஷெல்லோ ஷோ’ (The last film show- Chhello Show) படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சிறிய கிராமத்தில் இருக்கும் சிறுவனுக்கு திரைப்படம் மீதான காதல் பற்றி படமாக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமலி, ரிச்சா மீனா, திபன் ராவல், பரேஷ் மேக்தா ஆகியோர் நடித்துள்ளனர். 2021இல் டிரிபிகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அக்.2021இல் வல்லடோலிட் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஸ்பைக் விருது பெற்றது. இந்த திரைப்படம் அக்டோபர் 14ஆம் நாள் திரையரங்கில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

கடந்தாண்டு கூழாங்கள் எனும் தமிழ் திரைப்படம் இந்தியாவின் சார்பாக தேர்வு செய்யப்பட்டது. 

95வது ஆஸ்கர் விருது 2023ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் மார்ச்12 ஆம் நாள் நடைபெற உள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT