செய்திகள்

சிரஞ்சீவி-சல்மான் நடிக்கும் காட்ஃபாதர்: டிஜிட்டல் உரிமம் 57 கோடியா? 

20th Sep 2022 05:50 PM

ADVERTISEMENT

 

சிரஞ்சீவி-சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்ஃபாதர் படத்தின் டிஜிட்டல் உரிமம் 57 கோடிக்கு விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தமிழ் இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளப் படமான லுசிஃபர் படத்தின் ரீமேக் இது. இசை - தமன். ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

இப்படத்தில் சிறிய வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார். சமீபத்தில் முதல் பாடலின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதில் சிரஞ்சீவி சல்மான் இருவரும் இணைந்து இருக்கிறார்கள் என்பதே சிறப்பு. சல்மான் கான் இந்த படத்தில் சிரஞ்சீவியின் தம்பியாக நடித்துள்ளார். 

ADVERTISEMENT

தற்போது, படத்தின் டிஜிட்டல் உரிமம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிக்காக ரூ. 57 கோடி நெட்பிளிக்ஸ் விலை பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. 

இந்தப் படம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT