செய்திகள்

திரிஷாவைத் தொடர்ந்து பெயரை மாற்றிய விக்ரம்!

14th Sep 2022 10:52 AM

ADVERTISEMENT

 

டிவிட்டரில் நடிகர் விக்ரம் தன் பெயரை ஆதித்ய கரிகாலன் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப்.30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதனால், படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். அதன்  ஒரு பகுதியாக பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  

ADVERTISEMENT

இதையும் படிக்க: மாமன்னன் படப்பிடிப்பு நிறைவு

இந்நிலையில் இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில் தன் பெயரை ‘ஆதித்ய கரிகாலன்’ என மாற்றம் செய்துள்ளார்.

முன்னதாக, நடிகை திரிஷா தன் டிவிட்டர் பெயரை ‘குந்தவை’ எனப் பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT