செய்திகள்

வெந்து தணிந்தது காடு படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியானது  

12th Sep 2022 09:28 PM

ADVERTISEMENT

 

நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் தணிக்கைச் சான்றிதழ் யு/ஏ என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா என இரண்டு வெற்றிகளுக்கு பிறகு 3வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

ஏழ்மையின் காரணமாக மும்பைக்குப் பிழைக்கப் போகும் முத்து (சிம்பு) எதிர்கொள்ளும் பிரச்னைகளும் சவால்களுமாக இப்படம் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு’ வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT