செய்திகள்

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் படத்தில் இணைந்த எஸ்.ஜே. சூர்யா! 

10th Sep 2022 11:06 AM

ADVERTISEMENT

 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் பிரபல  இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். 

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். 

இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க, அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் ஷங்கருடன் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

ADVERTISEMENT

தற்போது இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். 

எஸ்.ஜே. சூர்யா இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

லெஜெண்டரி இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டுமென்ற எனது கனவு நனவானது. அவருக்கு நன்றி. மெகா பவர் ஸ்டாரர் ராம் சரணுடன் இணைந்து நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT