நடிகை சமந்தா நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லரான யசோதா திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிக்கும் திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாராகும் இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | புஷ்பா-2 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி: என்ன கதாபாத்திரம் தெரியுமா?
ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்துள்ளதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.