செய்திகள்

சூர்யா - சிறுத்தை சிவா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

9th Sep 2022 04:34 PM

ADVERTISEMENT

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சூர்யா 42 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் படத்தின் கதை இருக்கும் என மோஷன் போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. முழுக்க முழுக்க 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க- அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவர் பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்: கமல்ஹாசன் இரங்கல்

ADVERTISEMENT

தேவி ஸ்ரீ பிரசாத் - சூர்யா கூட்டணி ஏற்கனவே மாயாவி, ஆறு போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது. மேலும் சிவாவின் வீரம் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். புஷ்பா படத்தின் பாடல்கள் உலக அளவில் மிக பிரபலமானது. இந்த காரணங்களால் இந்தப் படத்தின் பாடல்கள் மீது இப்பொழுதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மிரட்டும் மோஷன் போஸ்டர் விடியோ இங்கே...

 

ADVERTISEMENT
ADVERTISEMENT