செய்திகள்

புஷ்பா-2 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி: என்ன கதாபாத்திரம் தெரியுமா?

9th Sep 2022 03:14 PM

ADVERTISEMENT

ரசிகர்களின் பெரும்வரவேற்பைப் பெற்ற புஷ்பா திரைப்படத்தின் 2ஆவது பாகத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கவிருப்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்தின் 2ஆவது பாகத்தின் படப்பூஜை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்றது. 

இதையும் படிக்க | என் வளர்ப்புப் பெண்ணின் கணவனாகலாம், எனக்கு மருமகனாக முடியாது: ராஜ்கிரண்

நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் நடிகை சாய் பல்லவியும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடிக்க உள்ளதாகவும் அவரது கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT