செய்திகள்

புதுமையான தோற்றத்தில் ஜெயம் ரவி மிரட்டும் 'சைரன்' படப்பிடிப்பு துவங்கியது!

5th Sep 2022 08:50 PM

ADVERTISEMENT

 

தமிழ் திரைத்துறையின் நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான  ‘சைரன்’ படத்தின் படப்பிடிப்பு கோலகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழ் திரையுலகில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமாகி, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி, அடுத்ததாக ‘சைரன்’ எனும் பிரமாண்ட படத்தில் நடிக்கிறார். இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

ADVERTISEMENT

மிகப்பிரமாண்ட பொருட்செலவில்,  குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் காட்சித்துணுக்கு இப்போதே படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. 

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்தும், செல்வகுமார் ஒளிப்பதிவும் செய்துள்ள இப்படத்திற்கு  எடிட்டர் ரூபன் எடிட்டிங் செய்யவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT