செய்திகள்

‘இரவின் நிழல்’ படம் அமேசானில் எப்போது வெளியாகும்? ஆர்.பார்த்திபன் தகவல்

31st Oct 2022 09:57 AM

ADVERTISEMENT

‘இரவின் நிழல்’ படம் அமேசான் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்கிற தகவலை ஆர்.பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.

பார்த்திபன் எழுதி இயக்கி, தயாரித்த படம் இரவின் நிழல். இப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

இதையும் படிக்க- தமிழகத்தில் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

மேலும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவாகியிருந்தது. இந்த நிலையில் ‘இரவின் நிழல்’ படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்கிற தகவலை ஆர்.பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் தனது முகநூலில், அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும் ! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்! நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT