செய்திகள்

'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் இசையமைப்பாளர் காலமானார்! 

31st Oct 2022 06:05 PM

ADVERTISEMENT

ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இசையமைப்பாளர் ஆர். ரகுராம் காலமானார். 

2017ஆம் ஆண்டு சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் விமர்சன் ரீதியாக நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் விதார்த், ரவீனா ரவி நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைத்ததின் மூலம் அறியப்பட்டவர் இசையமைப்பாளர் ஆர். ரகுராம். 

ஏராளமான குறும்படங்கள் மற்றும் தனிப்பட்ட இசை ஆல்பங்களில் பணியாற்றியுள்ளார். அவரது இசையில் பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்திய சோதனை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அரியவகை நோயினால் பாதித்த ரகுராம் 38 வயதிலேயே சனிக்கிழமை (அக்.29) உயிரிழந்ததிற்கு சினிமா ரசிகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT