செய்திகள்

இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு: போலீஸ் விசாரணை

29th Oct 2022 01:45 PM

ADVERTISEMENT

இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள கண்ணாம்பாள் தெருவில் வசித்து வரும் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது காரை வீட்டில் நிறுத்திவிட்டு வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார்.

பின்னர் வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைந்திருந்தது தெரியவந்தது. ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் கற்களை வீசி கார் கண்ணாடியை உடைத்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இதையடுத்து, ஆர்.கே. செல்வமணி புகார் அளித்ததன் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

ADVERTISEMENT

ஆர்.கே. செல்வமணி திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி சங்கத்தில் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். 

இதையும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ADVERTISEMENT
ADVERTISEMENT